வெளிநாட்டு ஊழியருக்கு செக்.. S$6,500 அபராதம் – இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்யாதீர்கள்!

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

முறையான Work pass அனுமதி இல்லாமல் ஃப்ரீலான்ஸ் பகுதி நேர வேலை செய்ததற்காக வெளிநாட்டு பத்திரிகை ஊழியர் ஒருவருக்கு S$6,500 அபராதம் நேற்று (மே 17) விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ், தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார் 36 வயதான Calum Arthur Alistair Stuart. இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் பரிசீலிக்கப்பட்டது.

பயணிகளுக்கு தனிமை, சோதனை இல்லை; சிங்கப்பூருக்கு குவியும் பயணிகள் – விமான நிறுவனங்கள் மகிழ்ச்சி!

இதே சேவையில் ஈடுபட்ட இணை குற்றவாளிகள் Refinitiv Asia மற்றும் ஊடக வல்லுநர் முஹம்மது ஃபிர்தியான்ஷா சாலிமத் – இதற்கும் முறையே S$5,500 மற்றும் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த Stuart, 2014ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டவரைத் திருமணம் செய்துகொண்டார்.

Long-term visit pass அனுமதியில் இருந்த அவர், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனை அடுத்து, முறையான work pass அனுமதி இல்லாமல் இருந்த அவரின் சட்டவிரோத வேலை வாய்ப்பு தொடர்பான தகவலை பெற்ற மனிதவள அமைச்சகம் கடந்த 2019 செப்டம்பரில் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், நேற்று (மே 17) அவருக்கு S$6,500 அபராதம் விதிக்கப்பட்டது.

முறையான வேலை அனுமதி இல்லாமல் சுயமாக தொழில் செய்யும் வெளிநாட்டவராக இருந்தாலும், அத்தகைய குற்றத்திற்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை, S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

முதலாளிகளுக்கு டாடா காட்ட தயாராகும் பணியாளர்கள்: 3 பேரில் ஒருவர் சொல்லும் அதிர்ச்சி காரணம்!