இனி எப்படி நிம்மதியாக இருப்பது? சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை புலம்ப வைத்த அறிவிப்பு!

singapore Foreigners mom salary
AFP

லிட்­டில் இந்­தியா, கேலாங் சிராய், சைனா­ட­வுன், ஜூரோங் ஈஸ்ட் ஆகிய இடங்­க­ளுக்கு ஞாயிற்­றுக்கிழ­மை­க­ளி­லும், பொது விடு­முறை நாள்­க­ளி­லும் செல்­லும் முன்­னர் தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிறப்பு அனு­ம­திச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்ற புதிய நடை­முறை உள்ளது.

புதிய நடை­முறை ஜூன் 24ஆம் தேதி­யி­லி­ருந்து அமலுக்கு வந்தது. பாதிப்­பைக் கட்­டுப்­ப­டுத்­து­வது இதன் நோக்­கம் என கூறப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இத்­திட்­டம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சிலரும், ஏற்­ப­டுத்­தாது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேவை­யான பெரும்­பா­லான பொருள்­கள், சேவை­கள், வச­தி­கள் அனைத்­தும் தங்­கு­வி­டு­தி­யி­லேயே கிடைத்­து­வி­டு­வ­தா­க கூறினர்.

விடு­தி­யில் தங்­க­ளுக்கு அனு­ம­திச்­சீட்­டைப்­ பற்­றி­யும் அதற்கு எவ்­வாறு விண்­ணப்­பிக்க வேண்­டும் என்­ப­தைப் பற்­றி­யும் விளக்­கப்­பட்­ட­தா­க கூறப்படுகிறது.

சிலருக்கு இது­வரை இந்த அனு­ம­திச்­சீட்­டைப் பற்றி எது­வும் தெரியவில்லை. அனு­ம­திச்­சீட்­டிற்கு எவ்­வாறு பதிவு செய்ய வேண்­டும் என்று இது­வரை தெரி­விக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறி­னர்.

தங்­கு­வி­டு­தி­களும் தாங்­கள் பணி­பு­ரி­யும் நிறு­வ­னங்­களும் இந்த அனு­ம­திச்­சீட்­டைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னால் சிறப்­பாக இருக்­கும் எனக் கரு­து­கி­ன்றனர்.

ஆனால், இத்­திட்­டத்­தி­னால் கடை உரி­மை­யா­ளர்­கள் தங்­க­ளது வியா­பா­ரம் மந்­த­ம­டை­யும் என அச்­சம் கொண்­டுள்­ள­னர்.

இத்­த­கைய திட்­டத்­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேக்­கா­ வ­ரு­வது பெரு­ம­ளவு குறைந்து விடும்.

தங்­கு­வி­டு­தி­க­ளி­லேயே மளி­கைப் பொருள்­கள், காய்­க­றி­கள் போன்­ற­வற்றை விற்­கும் சிறிய கடை­கள் இருப்­ப­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தேக்கா வரு­வ­தற்­கான தேவை பெரி­தும் குறைந்துவிட்­டது. ஆனால், இச்­சிறு கடை­கள் தேக்­கா­வி­லி­ருக்­கும் மொத்த விற்­ப­னைக் கடை­க­ளி­லி­ருந்து பொருளை வாங்கி, லாப நோக்­கத்­து­டன் விலையை அதி­க­ரித்து விற்க வாய்ப்­புள்­ளது.

இந்தத் ­திட்­டம் அனைவரும் பாது­காப்­பாக இருக்­கும் வாய்ப்பை அதி­க­ரித்­தா­லும் வியா­பார வேகத்­தைக் குறைத்­து­வி­டும்.