நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள பிளாக் 27 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் (Blk 27 New Upper Changi Road) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (09/03/2022) மதியம் 01.15 PM மணிவாக்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் (Singapore Civil Defence Force- ‘SCDF’) தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் (Fourth Floor Unit) உள்ள வீடு ஒன்றின் உள்ளே இருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்தனர். அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. இதனிடையே, குழந்தையுடன் வீட்டிலில் இருந்து வெளியேறிய ஒருவர், தீ கொளுந்துவிட்டு எரியும் அறையில் நபர்கள் இருப்பதாக தீயணைப்பு வீரர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஒரு சில தீயணைப்பு வீரர்கள் தீ கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த அறைக்குள் சாமார்த்தியமாக நுழைந்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்து மூன்று பேரை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மற்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதும் அணைத்தனர். எனினும், அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து தீக்கரையானது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும் – மீறினால் முதலாளிகளின் Work Pass சலுகை ரத்து

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மூச்சு விடவில்லை; இதைத் தொடர்ந்து, அவரை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் அவசர மருத்துவ சேவை பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் சாங்கி பொது மருத்துவமனைக்கு (Changi General Hospital) அனுப்பி வைத்தனர்.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் மொத்தம் நான்கு பேரை சாங்கி பொது மருத்துவமனை மற்றும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) அனுப்பி வைத்தனர். அவர்களில் அண்டை வீட்டில் இருந்த பெண், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்னதாக, சுயமாக வெளியேறியதால் தோளில் தீக்காயம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மூத்த துணையமைச்சர் சிம் ஆன்!

தீ விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வரவேற்பறையில் சார்ஜ் செய்துக் கொண்டிருந்த தனிநபர் மொபிலிட்டி சாதனத்தில் (Personal Mobility Device- ‘PMD’) இருந்து மின்சார கசிவு ஏற்பட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இரண்டு பவர் அசிஸ்டட் சைக்கிள்கள் (Power Assisted Bicycles- ‘PABs’) இருந்தன. ஒன்று வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது, மற்றொன்று வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.