சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

new work permit CMP Employers provide proof of stay
Photo: Today

சிங்கப்பூரில் கட்டுமானம், கடல்துறை மற்றும் செயல்முறை (CMP) துறைகளில் புதிதாக வேலைக்கு வரவுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய ஒர்க் பெர்மிட் (work permit) அனுமதியின் கீழ் சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தங்குமிடத்திற்கான ஆதார சான்றினை அவர்களின் முதலாளிகள் வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்

அதாவது புதிய ஒர்க் பெர்மிட் கீழ் வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் அதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் செப்டம்பர் 19 முதல் நடப்புக்கு வரும்.

இருப்பினும், மலேசியர்களுக்கு இது பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடகைக் குடியிருப்பு (tenancy) அல்லது ஒப்பந்தங்கள் கீழ் வசிக்கும் வாடகை இடங்கள் (rental agreements) அல்லது தங்குமிடம் வழங்கிய உரிமையாளரின் ஒப்பந்த சான்றிதல் போன்ற ஆவணங்களை முதலாளிகள் அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்.

தங்கும் நோக்கத்திற்காக கட்டப்பட்ட விடுதிகள் (purpose-built dormitories), கட்டுமான தற்காலிக குடியிருப்புகள் (CTQ), தற்காலிக உரிம குடியிருப்புகள் (temporary occupation licence quarters) அல்லது முதலாளிகளின் சொந்த தங்கும் விடுதிகளில் தங்களுடைய ஊழியர்களை தங்க வைத்திருக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்று MOM கூறியுள்ளது.

அதே நேரத்தில், தனியார் குடியிருப்புகள், ஹோட்டல்கள் அல்லது விடுதிகளில் தங்களுடைய ஊழியர்களை தங்க வைக்கும் முதலாளிகள் கூடுதல் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகையால் ஒப்புதல் அனுமதி பெற ஆறு வாரங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்றும் அது கூறியுள்ளது.

தங்குமிடத்திற்கான ஆதார சான்றுகள் அளிக்காமல் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வரும் முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விமானத்தில் நடந்த முகசுளிப்பு சம்பவம்.. பயணி இருவரிடம் மன்னிப்பு கேட்ட SIA