சிங்கப்பூரில் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் குற்றவியல் சட்ட மாற்றங்கள்..!

New year changes in Singapore

New year changes : சிங்கப்பூரில் இந்த புத்தாண்டில் தொழிநுட்ப ரீதியிலான குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மாற்றம் கண்டுள்ளன.

இதில் குறிப்பாக ஆபாச காணொளிகள், தகவல் திருட்டு, பொய்யான செய்தி பரப்புதல் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக சட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புகையிலை பொருட்களுக்கு புதிய விதிமுறை..!

ஆபாசக் காணொளிகள்:

ஆபாசக் காணொளிகள் தொடர்பான குற்றம் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் சூழலில், இதுபோன்ற காணொளிகளை எடுப்பது, விநியோகிப்பது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது மற்றும் வைத்திருப்பது, மேலும் காணொளிகளைப் பார்ப்பதும் குற்றமாக வகைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் தகவல்களை வெளியிடுவது:

ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களை வெளியிடுவதும், மேலும் அவரை அச்சுறுத்துவதும் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்கள்:

பொய்யான தகவல்களை வெளியிட்டு ஒருவரின் நற்பெயருக்குப் களங்கம் ஏற்படுத்தினால், இதுகுறித்து நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் பாதுகாப்பு சட்ட விரிவாக்கம்:

அச்சுறுத்தலால் பாதிக்கப்படுவோருக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Seithi