நியூசிலாந்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் நனையா மஹூதா (New Zealand Foreign Minister Nanaia Mahuta), சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், இரு நாடுகளிடையேயான வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “வெளியுறவு அமைச்சராக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் நனையா மஹுதாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

எங்களின் மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மை மூலம் எங்கள் சிறந்த இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினோம். காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் விவாதித்தோம். மேலும் பிராந்திய வளர்ச்சிகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

போக்குவரத்து சிங்னல் இல்லாதபோது சாலையை கடந்த மூதாட்டி – நூலிழையில் தப்பிய காணொளி

சிங்கப்பூருக்கு நியூசிலாந்து முக்கிய பங்குதாரர். 2001- ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் இடையே நெருக்கமான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், சிங்கப்பூரின் முதல் இருதரப்பு FTA ஆகும். எங்கள் கூட்டாண்மையின் கீழ் ஒரு முக்கிய முயற்சியாக கடந்த ஆண்டு அதை மேம்படுத்தினோம்.

சிறிய நாடுகளாக, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகியவை வழித்தோன்றல்களாக இணைந்து சிறப்பாக செயல்பட்டன. டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் மற்றும் CPTPP ஆகியவற்றை நாங்கள் தொடங்கினோம், அது பெரிய நாடுகளின் நலன்களை ஈர்த்துள்ளது.” இவ்வாறு அமைச்சர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதலாக விமானங்கள் இயக்க வேண்டும் என கடிதம்

சிங்கப்பூரைத் தொடர்ந்து, இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தனது முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக, இந்த ஆறு நாடுகளுக்கும் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.