புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ள ‘MWC’- வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு!

மகிழ்ச்சியான நாடு
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

 

புத்தாண்டு பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 31- ஆம் தேதி நள்ளிரவு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மெரினா பே பகுதியில் புத்தாண்டு கொண்டாட செல்வோரின் கவனத்திற்கு..

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம். வெளிநாட்டு ஊழியர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ள ‘MWC’- வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு!
Photo: MWC

இது குறித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் (Migrant Workers’ Centre- ‘MWC’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரின் 51 சூன் லீ சாலையில் (Soon Lee Road) உள்ள ‘MWC Recreation Club’- ல் வரும் ஜனவரி 01- ஆம் தேதி இரவு 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை.. “திருமணமான ஊழியர்களுக்கு” மட்டுமே அனுமதி என வைக்கப்பட்ட போஸ்டர்

கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேடை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு சுமார் 2,150 வெள்ளி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். எனவே, சிங்கப்பூரில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.