‘புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பேருந்து சேவைகளில் மாற்றம்’- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

Photo: SBS Bus Wikipedia

புத்தாண்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் சிங்கப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மரினா பேவில் (Marina Bay) சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர் வருவார்கள் என்பதால், சிங்கப்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணி உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல், மரினா பே சுற்றியுள்ள சாலைகள் சனிக்கிழமை மாலை முதல் மூடப்பட்டிருக்கும்.

புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”

இந்த நிலையில், எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் (SBS Transit Ltd) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மரினா பேயில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக, எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்துக்கு சொந்தமான 10, 14, 16, 56, 57, 70/70M, 100, 111, 130, 131, 133, 162M, 195, 196, 400, 502 ஆகிய எண் கொண்ட பேருந்துகள் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 06.00 மணி முதல் பேஃபிரண்ட் அவென்யூ (Bayfront Avenue), பீச் ரோடு (Beach Road) உள்ளிட்ட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்து சேவைகள் வழங்கப்பட மாட்டாது; பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: SBS Transit Official Facebook Page

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் 1800-287-2727 என்ற தொலைபேசி எண்ணையோ (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையதளப் பக்கத்தையோ அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் ஊழியர் மரணம் ! – பணியிட பாதுகாப்பு போதுமானதா? MOM நடவடிக்கை!

அதேபோல், எந்தெந்த பேருந்து நிறுத்தங்களில் பேருந்து சேவைகளை எஸ்பிஎஸ் டிரான்ஸிட் வழங்காது? என்பது குறித்து மேலே பதிவிட்டுள்ள அட்டவணையில் விரிவாகப் பார்க்கலாம். அட்டவணையில் பேருந்து நிறுத்தங்களில் பெயர், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.