“நியூசிலாந்து பிரதமர் மிகச்சிறந்த அர்ப்பணிப்பையும், தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்”- சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், “வரும் பிப்ரவரி மாதம் 7- ஆம் தேதியுடன் தனது பதவிக்காலம் முடிவடைகிறது. அக்டோபர் மாதம் நடக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிட தன்னிடம் ஆற்றல் இல்லை. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

சூட்கேஸில் சடலமாக கிடந்த வெளிநாட்டு ஊழியர் – துண்டு துண்டாக கிடந்த பிரேதம்

இந்த நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுகிறார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் சிங்கப்பூரின் உறுதியான நண்பராக இருந்து வருகிறார். அவர், கடந்த 2019- ல் முதல் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்தார். அப்போது, சிங்கப்பூர் – நியூசிலாந்து இடையே மேம்படுத்தப்பட்டக் கூட்டாண்மையை நிறுவியதன் மூலம் எங்கள் சிறந்த உறவுகளை மேம்படுத்தினோம். தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நாங்கள் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம், நாங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கத் தொடங்கியபோது, ​​அவர் மீண்டும் வருகை தந்தார். மேலும், இரு நாடுகளிடையே விரிவுப்படுத்தப்பட்ட பசுமை பொருளாதாரம், காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைக்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

நேரிலும், ஆன்லைனிலும், சர்வதேச அரங்கிலும் பலமுறை சந்தித்திருக்கிறோம். கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் மற்றும் கோவிட்-19 போன்ற நெருக்கடியான காலக்கட்டத்தில் தனது நாட்டை வழி நடத்துவதில், அவர் மிகச்சிறந்த அர்ப்பணிப்பையும், தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் ஆர்டெர்னும், நானும் தொற்றுநோய்களின் போது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்வதற்கும், குறிப்புகளை மாற்றுவதற்கும் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். மேலும் நமது நாடுகளுக்கு இடையே விநியோக இணைப்புகள் திறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தோம்.

35 பயணிகளை விட்டு புறப்பட்டுச் சென்ற ஸ்கூட் விமானம்!

பிரதமர் ஆர்டெர்னின் வலுவான கூட்டாண்மை, ஆதரவுக்கு நன்றி. அவர் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.