சிங்கப்பூர் வருகிறார் நியூசிலாந்து பிரதமர்!

Photo: New Zealand Prime Minister Jacinda Ardern Official Twitter Page

நியூசிலாந்து அரசாங்கம் இன்று (11/04/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (New Zealand’s Prime Minister Jacinda Ardern), சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் நியூசிலாந்து பிரதமர் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ளார்.

சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கம் ? – எத்தனை பேர் ?

வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கான அமைச்சர் டேமியன் ஓ’கானர் (Minister for Trade and Export Growth Damien O’Connor) மற்றும் 13 வணிகத் தலைவர்களுடன் பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகத்துடன் மீண்டும் இணைந்திருக்க வேண்டும், மேலும் பல துறைகளில் நாம் வணிகங்களை ஆதரிப்பதற்கும், பிற நாடுகளின் பிரதமர்களை நேரில் காண காத்திருக்கிறேன்” என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தவறான நடவடிக்கை – உக்ரைன் போரில் அமெரிக்காவுடன் சீனா ஏன் நிற்கவில்லை? – நியூயார்க்கில் உரையாடிய சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூருக்கு வரும் நியூசிலாந்து பிரதமர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் துறை ரீதியான அமைச்சர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாகவும், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் இடையே, வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்டவைத் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.