சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கம் ? – எத்தனை பேர் ?

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்படாத ஊழியர்களின் வேலைவாய்ப்பு விகிதம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.

அதாவது, கடந்த 2021 டிசம்பர் 19 ஆம் தேதி நிலவரப்படி 52,000 தடுப்பூசி போடப்படாத ஊழியர்களைப் பற்றிய கேள்வி எழுந்தது.

சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இறுதியாக அனுமதி – மகிழ்ச்சி

அதில், 1 ஜனவரி 2022, 1 பிப்ரவரி 2022 மற்றும் மார்ச் 2022 முதல் எத்தனை பேர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது அந்த கேள்வி.

கடந்த மார்ச் 27, 2022 நிலவரப்படி, சிங்கப்பூரின் மொத்த ஊழியர்களில் 98.4% பேர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் தடுப்பூசி டோஸ் போட்டுக்கொள்ளாத உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 36,900 ஆகக் குறைந்துள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கான தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகள் இந்த 2022 ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வந்தது.

மேலும், வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அது 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மட்டுமே கிடைக்கும், என்றார் அமைச்சர் டான்.

கட்டிட பராமரிப்பு பணியின்போது 16வது மாடியில் இருந்து 9வது மாடிக்கு விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்