சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு இறுதியாக அனுமதி – மகிழ்ச்சி

Singapore Migrant Workers dorm Congregate Ramadan
(Photo: Nuria Ling/TODAY)

சிங்கப்பூரில் விதிக்கப்பட்ட 2 வருட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு வெளிநாட்டு ஊழியர்கள் ரமலான் தொழுகைகளை ஒன்றாகச் மேற்கொள்கின்றனர்.

கடந்த மார்ச் 29 அன்று கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்தியது சிங்கப்பூர், அன்று முதல் அன்றாடம் சிங்கப்பூரை சுற்றி என்னென்ன நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

கட்டிட பராமரிப்பு பணியின்போது 16வது மாடியில் இருந்து 9வது மாடிக்கு விழுந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே மரணம்

அதே போல, வெளிநாட்டு ஊழியர்களும் நமது சமூகத்தின் ஒரு பகுதி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமிய ஊழியர்கள் நோன்பு நோற்பர், அதில் சிறப்பு தொழுகை என்பது இன்றியமையாத ஒரு பகுதியாகும்.

இரண்டு வருடங்கள் சிங்கப்பூரர்களை விட கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த ஊழியர்களுக்கு, இறுதியாக மீண்டும் பிரார்த்தனை போன்ற சமூக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மசூதிகளில் பிரார்த்தனை செய்ய முடியும் என்பது மகிழ்ச்சி.

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு “ரமலான், தமிழ் புத்தாண்டு” சிறப்பு அன்பளிப்புகள்!