தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு “ரமலான், தமிழ் புத்தாண்டு” சிறப்பு அன்பளிப்புகள்!

(Image: Singapore Ministry of Manpower/ Facebook)

சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் முஸ்லீம் சமூக வெளிநாட்டு ஊழியர்கள் ஒற்றுமையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் வரும் புனித ரமலான் மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் அவர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் பண்டிகை விருந்துகள் வழங்கப்படும். இந்த முறை இரண்டுமே ஏப்ரல் மாதத்தில் வந்துள்ளது.

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

வரும் ஏப்ரல் 11 அன்று, பெரும்பாலான முஸ்லிம் வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் தங்கும் விடுதிகளில் சுமார் 70,000 பேரிச்சம்பழங்கள் விநியோகிக்கப்படும்.

அதே போல, பெரும்பாலான இந்து வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் தங்கும் விடுதிகளில் ஏப்ரல் 14 அன்று முறுக்கு மற்றும் லட்டு போன்ற சுமார் 5,000 சிற்றுண்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்படும்.

கோவிட்-19 தொற்று தாக்கத்துக்கு இடையில், இந்து மற்றும் முஸ்லீம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) இதனை விநியோகம் செய்யவுள்ளது.

இந்த சேவை திட்டங்களை வழங்கும் HEB இன் ஒரு பிரிவான “Community Seva”, வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசுகளை விநியோகிக்கும் முயற்சியின் ஒருங்கிணைப்பு அமைப்பாக உள்ளது.

வெளிநாட்டு ஊழியர் வறுமையில் இருந்தபோது S$1,000 கொடுத்து உதவிய சிங்கப்பூர் பெண்மணி – 11 ஆண்டுகள் கடந்தும் பெண்மணியை தேடிவரும் ஊழியர்!