எல்லாருக்கும் இல்லை – குரங்கம்மைத் தடுப்பூசி பொதுமக்களுக்கு இல்லைனா யாருக்கு ?

monkeypox local singapore

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஆய்வக மற்றும் சில சுகாதார ஊழியர்களுக்கு குரங்கம்மை தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.சுகாதாரப் பணியாளர்கள் அவர்களது வேலையின் காரணமாக குரங்கம்மை நோயினால் பாதிக்கப்படுவதற்கான அதிக அபாயத்தில் உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றனர்.பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வரும் இந்நோய் குறித்த நாடாளுமன்ற கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மூத்த இணை அமைச்சர் ஜனில் கடந்த திங்கள்கிழமை (ஜூலை 4) எழுத்துப் பூர்வமாக பதிலளித்தார்.

சுகாதார அமைச்சகம் எவ்வாறு குரங்கம்மைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது என்றும்,முன்களப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு குறிப்பிடப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதை கருத்தில் கொள்ளுமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Ng Ling Ling கேள்வியெழுப்பினார்.

குரங்கம்மை காய்ச்சல் பரவுதலைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக உபயோகிப்பதன் மூலமும்,நெரிசலான பகுதிகளில் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலமும் திறம்பட கட்டுப்படுத்த முடியும் என்று டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார்.கோவிட் தடுப்பூசியை போலல்லாமல் ,இது சர்வதேச பதில்கள் மற்றும் உலகளாவிய பரிந்துரைகளுக்கு இணங்குவதாக அவர் கூறினார்.

தற்போது பெரியம்மை தடுப்பூசி குரங்கம்மையைக் குணமாக்குவதில் 85 விழுக்காடு பயனளித்தாலும் ,அதனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும்.காய்ச்சலின் தீவிரத்தைத் தடுப்பதற்கு ,அறிகுறிகள் தென்படும்போதே தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைபிடிப்பது பரவும் அபாயத்தைக் குறைக்கும் என்று அறிவுறுத்தினார்.

குறிப்பாக பயணம் மேற்கொள்ளும்போது மக்கள் அவர்களது தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்தால் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.