சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிர்பயா வழக்கு; 4 குற்றவாளிகளுக்கும் ஜன.22 தூக்கு..!

Nirbhaya gangrape case verdict : நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியை சேர்ந்த 23 வயதான பிஸியோதெரபி மாணவி திரைப்படம் பார்த்துவிட்டு தனது நண்பருடன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த பேருந்துக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் பழமையான MRT பாதைகள் புதுப்பித்தல் பணி..!

நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது இந்தச் கொடூர சம்பவம். இதையடுத்து மறுநாளே முக்கிய குற்றவாளியான பஸ் ஓட்டுநர் ராம்சிங் கைது செய்யப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் இந்த குற்றச்செயலில் தொடர்புள்ள அவரது சகோதரர் முகேஷ் சிங், ஜிம் பயிற்சியாளராக இருந்த வினய் ஷர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டது.

இருப்பினும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார்.

இந்த நிலையில் நால்வரின் மரண தண்டனை உறுதி செய்வது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் அரோரா முன்னிலையில் இரு தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இதையும் படிங்க : ரஜினியின் தர்பார் பட விவகாரம்; மலேசியாவில் தர்பார் படத்தை வெளியிட தடை…!

அரசு தரப்பு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்தில் முன்னிலையிலும் அல்லது குடியரசுத்தலைவரின் முன்னிலையிலும் குற்றவாளிகள் தொடர்பான மனு, நிலுவையில் இல்லை. எனவே இவர்களது தண்டனை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அதேநேரம், குற்றவாளிகளான முகேஷ் மற்றும் வினய் ஷர்மா ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தாங்கள் தயாராகி கொண்டிருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட வாரண்ட் பிறப்பித்தார்.

அனைத்து சட்ட நடைமுறைகளையும், 14 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த அதிரடி தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.