சிங்கப்பூரின் பழமையான MRT பாதைகள் புதுப்பித்தல் பணி..!

Renewing Singapore's oldest MRT lines to cost more than $2.5 billion (PHOTO: LAND TRANSPORT AUTHORITY)

சிங்கப்பூரில் மிகப்பழமையான வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு எம்ஆர்டி வழிகளை புதுப்பிப்பதற்கான பல ஆண்டு திட்டத்திற்கு சுமார் 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2), வடக்கு-தெற்கு பாதையிலுள்ள புக்கிட் படோக் நிலையத்திற்கு சென்றபோது, இந்த புள்ளிவிவரத்தை வெளிப்படுத்திய போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான், மேலும் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உங்களுடைய பாஸ்போர்ட்டை தொலைத்தால் என்ன செய்ய வேண்டும்??

குறிப்பாக மின்சாரம் வழங்கல் அமைப்பு, டிராக் சுற்றுகள் மற்றும் முதல் தலைமுறை ரயில்களை மாற்றுவது இதில் அடங்கும்.

முதல் கட்ட பணிகளின் போது, ரயில் ஸ்லீப்பர்கள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட சமிக்ஞை அமைப்பு ஆகியவை மாற்றப்பட்டன.

மேலும், இந்த மின் வழங்கல் முறை புதுப்பித்தல், வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : அளவுக்கு மீறி பயண உடமைகளை ஏற்ற மறுத்த சிங்கப்பூர் ஓட்டுநர்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய சுற்றுலா குழு..!

இதில் 1,300 கி.மீ மின் கேபிள்கள், 206 மின்மாற்றிகள், 172 சுவிட்ச்போர்டுகள் மற்றும் உபகரணங்களை 171 துணை மின்நிலையங்களில் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 இல் தொடங்கிய இந்த புதுப்பித்தல் திட்டம், 2024க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.