கொரோனா விதிமீறல்- பிரபல உணவு நிலையத்தில் அமர்ந்து உணவருந்த 10 நாட்களுக்கு தடை!

Photo: Google Maps

சிங்கப்பூரில் உள்ள அனைத்து உணவு நிலையங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், ஷாப்பிங் மால்களில் பொதுமக்கள், கடைகளின் உரிமையாளர்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. மேலும், வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது கடைகளுக்கு சென்று நேரில் ஆய்வு நடத்தி, வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இன்று (டிச. 7) முதல் VTL விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை

அந்த வகையில், பீஷான் ஜங்சன் 8- ல் உள்ள கடைத்தொகுதியில் (Bishan Junction 8 Food Junction Food Court) செயல்படும் பிரபலமான உணவு நிலையம் ‘ஃபுட் ஜங்சன்’ (Food Junction) ஆகும். இந்த உணவு நிலையத்திற்கு தினந்தோறும் 1,000- க்கும் மேற்பட்டோர் வந்து உணவருந்திச் செல்வதும், உணவுகளை பார்சல் வாங்கிச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த உணவு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை. இதனை உணவு நிலையத்தின் நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பலமுறை மீறியுள்ளனர்.

இதையடுத்து, ‘ஃபுட் ஜங்சன்’ உணவு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த டிசம்பர் 4- ஆம் தேதி முதல் டிசம்பர் 13- ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உணவகத்தில் உணவு பார்சல் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவுகளை பார்சல் மூலம் வாங்கிச் செல்லலாம்.

ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணி!

அமர்ந்து உணவருந்த தடையைத் தொடர்ந்து, மேஜைகள் மற்றும் நாற்காலிகளை எடுத்து ஓரமாக வைத்துள்ளது உணவு நிலையத்தின் நிர்வாகம்,

வாடிக்கையாளர்கள் செய்யும் சிறு தவறுகளால் உணவு நிலையத்தின் உரிமையாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.