சிங்கப்பூரில் 2வது டோஸ் பூஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படுமா.? – சுகாதாரத்துறை விளக்கம்.!

Pic: Reuters

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டோரிடம் தொற்று பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதையும், தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு தொடர்பான ஆதாரங்களையும் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் (Kenneth Mak) நேற்று (பிப்.16) தெவித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு எதிரான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும், 2வது பூஸ்டர் தடுப்பூசி தேவையா அல்லது 2வது பூஸ்டர் தடுப்பூசி தேவையெனில் அது எப்போது தேவைப்படும் என்பது குறித்து தற்போது முடிவு செய்வது சரியானதாக இருக்காது என்றும் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் டெல்டா கிருமி அலை உச்சத்தின்போது 8,000 உயிரிழப்புகளை தவிர்க்க உதவியது “தடுப்பூசி”

தற்போது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படி பலரை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றும், 2வது பூஸ்டர் தடுப்பூசி தேவை என்ற எண்ணம் இப்போது இல்லை என்றும் கென்னத் மாக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் திரு. ஓங் கூறுகையில், 2வது மற்றும் 3வது கூடுதல் தடுப்பூசி தேவையா என்பது குறித்து அறிவியல் அறிஞர்கள் இன்னமும் விவாதித்து வருகிறார்கள் எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உருமாறிய கிருமிகள் ஓமிக்ரான் போலவே இருந்தால் அதற்காகவே சிறப்பான தடுப்பூசியை உருவாக்க வேண்டிய தேவை இல்லாமல் போகலாம் எனவும் தெரிவித்தார்.

டெல்டா வகை போன்ற கிருமிகள் உருமாறி தலையெடுக்கும் பட்சத்தில், அந்தத் தொற்றுக்கு எதிராக நம்மை பாதுகாக்க சிறப்பு அம்சங்கள் வாய்ந்த தடுப்பூசியை உருவாக்குவது பற்றி பரிசீலிக்க வேண்டி இருக்கலாம் என MOH-ன் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக் குறிப்பிட்டார்.

போக்குவரத்து காவல் அதிகாரியிடம் தன்னுடைய வேலையை காட்டிய வெளிநாட்டு ஊழியர் – தூக்கிய போலீஸ்