தடுப்பூசி போடாத நீண்ட கால, குறுகிய கால பயணிகள் சிங்கப்பூர் நுழைய முடியுமா? – அப்படியானால் என கட்டுப்பாடுகள்?

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி (Long-term pass) வைத்திற்கும் பயணிகள் பொதுவாக சிங்கப்பூர் நுழைய அனுமதி இல்லை.

மேலும், 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குறுகிய கால பயணிகளும் (Short-term visitors) அதே போல சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

ஆனால்…

  • நீண்ட கால அனுமதி வைத்திருக்கும் மருத்துவ ரீதியாக தடுப்பூசிகளுக்கு தகுதியற்ற நபர்கள்
  • நீண்ட கால அனுமதி வைத்திருக்கும் 13 முதல் 17 வயதுடைய சிறார்கள்
  • நீண்ட கால மற்றும் குறுகிய கால அனுமதி பயணிகள் வைத்திருக்கும் மற்ற செல்லுபடியாகும் நுழைவு (valid entry) அனுமதி

ஆகிய பயணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும்.

சோதனை நடைமுறை

இந்த பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் முன் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஏழு நாள் SHN வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

அவர்களின் SHN தனிமை முடிவில் PCR சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

Breaking: VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!