சிலிண்டர் வாங்க போனவருக்கு ரூ.79 லட்சம் “ஜாக்பாட்”!

அமெரிக்காவில் வட கரோலினா மாகாணத்தில் கடைக்கு கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக செல்லும் வழியில் லாட்டரி வாங்கி சுரண்டிய வாலிபருக்கு இந்திய மதிப்பில் 79 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள பியூலாவில்லே நகரத்தை சேர்ந்தவர் வில்லியம் ஜோன்ஸ்.  இவருக்கு 32 வயதாகிகிறது. எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்டவர்.

சமீபத்தில் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்கள், இறைச்சி மற்றும் கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அந்த கடையின் அருகே உள்ள லாட்டரி கடையை பார்த்துள்ளார். 20 டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 1,550 ரூபாய்) கொடுத்து ஒரு ஸ்க்ராட்ச் லாட்டரி எனப்படும் சுரண்டல் லாட்டரியை வாங்கி இருக்கிறார்.

மொத்தம் இந்திய மதிப்பில் 79 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட அந்த லாட்டரியில் கிடைத்திருக்கிறது.

லாட்டரி வென்ற வில்லியம் ஜோன்ஸ் இது குறித்து கூறுகையில், ”இந்த பணத்தை எப்படி பயன்படுத்துவது என ஏற்கனவே முடிவு செய்து விட்டேன். எனது திருமணம் குறித்து சிந்திப்பேன்” என்றார்.