உணவங்காடி நிலையத்தில் பிடிபட்ட 6 பேர் – அபராதம் விதிப்பு

Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில், முழு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 6 பேர் உணவங்காடி நிலையத்தில் உணவருந்தி பிடிபட்டனர்.

இதனை நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று (மே 13) கூறியதாக CNA தெரிவித்துள்ளது.

சிராங்கூன் காபி கடையில் தீ… விரைந்த SCDF – ஒருவர் மருத்துவனையில் அனுமதி

பிடிபட்ட அவர்களுக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உணவருந்துபவர்களின் தடுப்பூசி நிலை குறித்த சோதனை நடவடிக்கை பல்வேறு F&B கடைகளில் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 9 வரை நடத்தப்பட்டதாக MSE கூறியது.

அந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 20,000 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர்.

உணவருந்துபவர்கள் தங்களின் தடுப்பூசியின் “கிரீன் டிக்” சரிபார்ப்பை TraceTogether (TT) செயலியின் மூலமாக காட்ட வேண்டும்.

இல்லை எனில், அமலாக்க அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் அணுகும்போது அவர்களின் TT டோக்கனை ஸ்கேன் செய்ய வேண்டும்.

பிடோக் நார்த் கோர தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி குழந்தை, ஆடவர் உயிரிழப்பு – முழுமையான விவரம்