“சிங்கப்பூரில் வரும் வாரங்களில் குரங்கு அம்மை கண்டறியப்படலாம்”

Not surprise if Singapore detects monkeypox case coming weeks Ong
iStock

சிங்கப்பூரில் வரும் வாரங்களில் குரங்கு அம்மை கண்டறியப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் சனிக்கிழமை (மே 28) தெரிவித்தார்.

சிங்கப்பூர் மக்கள் உலக நாடுகளுக்கு பரவலாகப் பயணம் செய்வதாகவும் அமைச்சர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா: ஏற்றுமதி கட்டுப்படுத்துவதால் சிங்கப்பூருக்கு பாதிப்பா?

இருப்பினும், கோவிட்-19 போன்று தொற்றுநோயாக குரங்கு அம்மை இருக்காது என்றும், இது பெரும்பாலும் உடல்ரீதியாக நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இது ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சில விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவி வந்த வைரஸ் என்றும் அவர் கூறினார்.

தோல் பகுதியில் தடிப்பு அல்லது கட்டிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு