நவம்பர் 5- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் உள்ள 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரும் நவம்பர் 5- ஆம் தேதி அன்று மாலை 04.20 PM மணி முதல் மாலை 05.45 PM மணி வரை, பிரதோஷ பூஜை நடைபெற உள்ளது.

சிங்கப்பூர்- சீனா இடையே 19 ஒப்பந்தங்கள் -சிங்கப்பூர் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்த சீன துணைப் பிரதமர்

அபிஷேக பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் https://sst.org.sg/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவுச் செய்துக் கொள்ளலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷ பூஜையைப் பார்க்க முடியும்.

தைவானில் உயிரிழந்த சிங்கப்பூர் பெண்! – குடிபோதையில் ஓட்டுனர்;பெண்மீது குற்றச்சாட்டு!

இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையையும் நாடுகிறோம். கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இந்த தகவலை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.