“நவம்பர் மாதத்தில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்”- சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

singapore November 2022 weather Met Service
Photo: Mothership

சிங்கப்பூரில் வானிலை நிலவரம் தொடர்பாக, சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (Meteorological Service Singapore) கூறியதாவது, “சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதம் மழை பெய்துள்ளது. கடந்த மாதம் அக்டோபரில் மாதாந்திர மொத்த மழைப்பொழிவு 412 மி.மீ. ஆகும். இது 2011- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகபட்சமாக 389.3 மி.மீ. ஆக இருந்தது.

“மோர்பி பாலம் இடிந்து விபத்து- உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் சிங்கப்பூர் துணை தூதரகம்”: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

நவம்பர் மாதத்தின் முதல் 15 நாட்களில் ஈரமான வானிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பருவமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், சில நாட்களில் அதிகாலையில் இருந்து காலை வரை அவ்வப்போது பலத்த காற்றுடன், பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பெரும்பாலான நாட்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம், சில நாட்களில் மாலை வரை மழை நீடிக்கும்.

நவம்பர் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு மொத்த மழைப்பொழிவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது உங்கள் உரிமை! – சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள் எளிதாக வாக்களிப்பதற்கான நடவடிக்கை

நவம்பர் முதல் பாதியில், பெரும்பாலான நாட்களில் தினசரி வெப்பநிலை 24 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஈரமான வானிலை சில நாட்களில் ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பநிலையாக இருக்கலாம். தினசரி குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும் இருக்கும்”. இவ்வாறு சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.