வயதான சக்கர நாற்காலி முதியவருக்கு உதவிய கட்டிட தொழிலாளி; குவியும் பாராட்டு..!

Construction Worker Pushes Wheelchair-Bound Man In Novena & Wins All Of Our Hearts

கட்டுமானத் தொழிலாளி ஒருவர், சக்கர நாற்காலியில் இருக்கும் வயதான ஒருவரை நோவனாவில் இருந்து தள்ளி செல்லும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) காலை, நிக்கோலா பெக் என்ற நெட்டிசன் நோவெனாவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சந்தித்த இந்த சிலிர்க்க வைக்கும் தருணத்தைப் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

அவர் பகிர்ந்த அந்த படத்தில், பளிச்சென்ற மஞ்சள் நிற பிப் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் முதியவரை சக்கர நாற்காலியில் தள்ளி செல்வதை காணலாம்.

பெக், நோவெனா சர்ச்சிற்கு அருகிலுள்ள ஒரு பாதையில் இந்த நிகழ்வை கண்டதாகக் கூறுகிறார்.

செல்வி. பெக்கின் கூறுகையில், வயதான இந்த மனிதர் சக்கர நாற்காலியில் பிணைக்கப்பட்டு நடக்க முடியாமல், தினமும் வேலோசிட்டி அல்லது Square 2 இல் யாசகம் கேட்பவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த மனிதநேயமிக்க கட்டுமானத் தொழிலாளி முதியவரை அருகிலுள்ள ஷாப்பிங் சென்டருக்குச் அழைத்து சென்றார், என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நல்லுலத்தின் வெள்ளை ஹெல்மெட், மலேசியர்கள் அல்லது சிங்கப்பூரர்களுக்கு பொதுவாக ஒதுக்கப்படும் மேலாளாளர் பதவியாக இருக்கலாம், என்று அறிவுறுத்துகிறது.
,
இவரின் இந்த மனிதநேயம் போற்றும் மகத்தான சேவையை சிங்கப்பூரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Source : Mustshare News