நொவீனா ரயில் நிலையம் திடீர் மூடல் – ரயில் பயணிகளுக்கு ஆலோசனை

வடக்கு-தெற்கு பாதையில் உள்ள நொவீனா ரயில் நிலையம்
Photo Facebook

வடக்கு-தெற்கு பாதையில் உள்ள நொவீனா ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக SMRT தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தந்த துறைகளில் வேலை அதிகரித்துள்ளது – தெரிந்துகொள்ளுங்கள்

பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் SMRT மாலை 6.30 மணியளவில் பேஸ்புக்கில் பதிவில் தெரிவித்துள்ளது.

அதாவது இன்று (அக் 27) மாலை ரயில் நிலையத்திற்குள் புகை கண்டறியப்பட்டதால் நிலையம் மூடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுரங்கப்பாதையில் புகை எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அது கூறியது.

வடக்கு-தெற்கு பாதையில் ரயில் சேவைகள் இயங்குவதாகவும், ஆனால் இரு திசைகளிலும் நொவீனா நிலையத்தில் ரயில் சேவை இருக்காது என்றும் அது கூறியுள்ளது.

தோ பாயோ மற்றும் நியூட்டன் இடையே இலவச வழக்கமான பேருந்து சேவை மற்றும் பிரிட்ஜிங் பேருந்து சேவைகள் இயங்குவதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நடந்த ஒரு சம்பவம் குறித்து மாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

தற்போது சம்பவ இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வெறும் S$1 வெள்ளிக்கு விமான பயணம்.. சிங்கப்பூரில் இருந்து 6 இடங்களுக்கு பயணிக்கலாம்