மயங்கி கீழே விழுந்த 25 வயது தேசிய ஆயுதப் படை சேவையாளர் மரணம்

ns-man-collapse-west-coast-park
Bee Khim/Facebook

வெஸ்ட் கோஸ்ட் பூங்காவில் மயங்கி கீழே விழுந்த 25 வயதான தேசிய ஆயுதப் படை சேவையாளர் (NSman) நேற்று புதன்கிழமை (மார்ச் 2) இறந்தார்.

இந்த சம்பவம் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் (HPB) விரைவு HIIT அமர்வு ஏற்பாட்டின் போது நடந்துள்ளது.

‘கருணை’ காட்டுங்கள்… நாகேந்திரன் மரணதண்டனை வழக்கு – சிங்கப்பூர் நீதிபதிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கை

தேசிய ஆயுதப் படை NS FIT திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் Quick HIIT அமர்வில் அவர் பங்கேற்றார்.

வார்ம்அப் பயிற்சி முடித்த பிறகு, பிரதான பயிற்சியின் தொடக்கத்திலேயே அவர் கீழே விழுந்தார் என்று பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் HPB ஆகியவை கூறியுள்ளன.

அதனை அடுத்து, பயிற்சியாளர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி தேவைகளை வழங்கினார்.

பின்னர் அவர் இரவு 7:55 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ் இரவு 8:23 மணிக்கு NUHக்கு வந்தடைந்தது, ஆனால் அவர் இரவு 9:21 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!