மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ‘NTUC FairPrice’ நிறுவனம்- காரணம் என்ன தெரியுமா?

Photo: Farah Nadya/ Facebook

சிங்கப்பூரில் வசித்து வரும் ஜஹாபர் (Jahabar) மற்றும் ஃபாரா நாடியா (Farah Nadya) என்ற முஸ்லீம் தம்பதி தங்களின் இரண்டு குழந்தைகளுடன் ‘Our Tampines Hub’- ல் உள்ள ‘NTUC FairPrice’ நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட்டுக்கு ஏப்ரல் 9- ஆம் தேதி அன்று சென்றுள்ளனர்.

விமானத்தில் ரகளை செய்த பயணியை இறக்கிவிட்ட விமான நிறுவனம்!

அப்போது, ஃபாரா நாடியாவின் கணவர் ஜஹாபர், முஸ்லீம் இலவசமாக வழங்கப்படும் இலவச இஃப்தார் பேக்குகள் இருக்கும் இடத்திற்கு சென்று, அங்கு இருந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தைப் படிக்க முயன்றார். அப்போது, கடையின் ஊழியர் ஒருவர், “இந்தியா எடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

ஜஹாபர் ஊழியரிடம் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க, ஊழியரோ, “இந்தியா எடுக்க முடியாது; நீங்கள் செல்லலாம்” என்று கூறியுள்ளார்.

அந்த ஊழியரிடம் பேசிய ஜஹாபர், “மீண்டும் அந்த வார்த்தையைக் கூற வேண்டாம்; இது அனைத்து முஸ்லீம்களுக்கும் உரியது. இந்தியன் (அல்லது) மலாய் என்று சொல்லாதீர்கள்” என்றார்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு வஜ்ரங்கி அலங்காரம்!

இந்த விவகாரம் ‘NTUC FairPrice’ நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றதால், அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

இது குறித்து ‘NTUC FairPrice’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “தம்பதிக்கு இலவச இஃப்தார் பேக்குகள் தொடர்பான விவகாரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம். அதன் பிறகு, நாங்கள் எங்கள் ஊழியருக்கும் ஆலோசனை வழங்கி உள்ளோம்.

ஒரு மாத ரமலான் காலத்தில் அனைத்து முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கும் இஃப்தார் பேக்குகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.15 ஆவது ஆண்டாக இதனை வழங்கி வருகிறோம். இலவச இஃப்தார் பேக்குகள் ரமலான் மாதத்தின் கடைசி நாளான ஏப்ரல் 21- ஆம் தேதி வரை கிடைக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.