மே தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ‘MWC’….. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்சாகம்!

மே தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள 'MWC'..... புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்சாகம்!
Photo: MWC

 

 

சிங்கப்பூரின் ‘MWC’ எனப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் (Migrant Worker’s Centre) ஏற்பாடு செய்துள்ள மே தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள், ஜூன் 11- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 07.30 மணிக்கு சிடிபிஎல் துவாஸ் தங்கும் விடுதியில் (CDPL Tuas Dormitory) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வங்கதேசத்தின் பாடகர் தாஸ்ரிஃப் கான் (Tasrif Khan) கலந்துக் கொள்கிறார். அத்துடன், அவரது இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

முன் உறுப்பில் கை வைத்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டு நபர் கைது

இந்த நிகழ்ச்சி, ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுக்கான சிறப்பு பரிசுகளும் காத்திருக்கிறது.

‘MWC’ வெளியிட்டுள்ள QR CODE-யை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை உஜ்ஜயினி ராய் ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பாடகர் தாஸ்ரிஃப் கான் உடன் இரவு உணவு அருந்தும் வாய்ப்பும், வெற்றியாளர்களுக்கு கிடைக்கும்.

சாங்கி விமான நிலையத்தில் புதிதாக மெக்டொனால்ட்ஸ் உணவகம் திறப்பு!

மேலும், நிகழ்ச்சியில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கப்படவுள்ளது. மே தின கொண்டாட்டங்கள் காரணமாக, சிராங்கூன் சாலையில் உள்ள ‘MWC’ அலுவலகம் ஜூன் 11- ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். எனவே, அவசர உதவிக்கு 6536-2692 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். ஜூன் 13- ஆம் தேதி முதல் பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று ‘MWC’ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த மே தின நிகழ்ச்சியால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.