சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேராசிரியர் திடீரென சுருண்டு விழுந்து மரணம்

nus-professor-passed-away-after-run

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த 53 வயதான பேராசிரியர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

மதியம் ரன்னிங் பயிற்சி முடிந்து வீடு திரும்பியவர் அசௌகரியம் உணர்ந்தார். பின்னர் குளித்த அவர் திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார்.

ஆனால், லீ லூ ஹே என்ற அந்த 53 வயதான பேராசிரியர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

அவர் இண்டஸ்ட்ரியல் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் & மேனேஜ்மென்ட் (ISEM) பாடங்களை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!

என்ன நடந்தது?

கடந்த மார்ச் 17, வியாழன் அன்று மதியம் 1 மணியளவில் லீ ரன்னிங் சென்றுள்ளார், மேலும் அவருக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளதாகவும் அவரது 21 வயது மகள் ஷின் மினிடம் கூறினார்.

“வீட்டிற்கு வந்ததும், கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்த அவர், குளித்துவிட்டு திடீரென மயங்கி விழுந்தார்.”

இறப்புக்கான காரணம் இருதய நோய் என்றும் கூறியுள்ளார் அவர்.

அவரது இந்த திடீர் மரணத்தை குடும்பத்தினர் எங்களால் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தாராளமாக வர முடியுமா? – Work permit, S Pass ஊழியர்களுக்கு முன் அனுமதி வேண்டுமா?