NUS விடுதியில் 437 குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு கோவிட்-19 பரிசோதனை

Singapore COVID-19
(PHOTO: Reuters)

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (NUS) விடுதியில் உள்ள 437 குடியிருப்பாளர்களுக்கு நேற்று (மார்ச் 23) சிறப்பு கோவிட் -19 சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கழிவு நீர் மாதிரியில் கோவிட் -19 தொற்றுநோயை பரப்பும் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அவர்களின் அனைத்து சோதனை முடிவுகளும் தற்போது நிலுவையில் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்துள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு மீண்டும் திரும்புவது குறையலாம்”

NUSஇல் உள்ள UTown விடுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கழிவு நீர் மாதிரியை தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பரிசோதித்ததில், அது குறைந்த அளவு COVID-19 தொற்றுநோயை பரப்பும் ரிபோநியூக்ளிக் அமிலம் (RNA) என்று கண்டறியப்பட்டது.

கடந்தகாலத்தில் தொற்றுநோயிலிருந்து குணமடைந்த குடியிருப்பாளர்களின் மூலக்கூறாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குணமடைந்த குடியிருப்பாளர்களை தவிர்த்து 437 குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ஊழியர் மரணம் – நிறுவனத்துக்கு S$105,000 அபராதம்!