சிங்கப்பூரில் நடந்த மாபெரும் மோசடி? எத்தனை பணியாளர்களின் பணம் பறிபோனதோ! அரசு வெளியிட்ட விவரம்!

mas-new-measures-scam
Teck Tong Teo/Google Maps

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் $600 மில்லியனுக்கும் அதிகமாக இழந்துள்ளனர். இது தொடர்பாக 24,000 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான மோசடி, எந்த விவரமும் அறியாத புலம் பெயர் பணியாளர்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வளர்ச்சியடைந்த இணைய இணைப்பு காரணமாக ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காக மாறிவிட்டது.

மோசடிகளைத் தடுப்பதற்கும், மோசடி போக்குகள் பற்றிய கண்ணோட்டத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் மோசடி தடுப்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 31.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

DBS ஆல் மீட்கப்பட்ட தொகையானது 2021 ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட $103 மில்லியன் மோசடி பணத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடி தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த, மற்ற வங்கிகளும் விரைவில் அதிகாரிகளை நிரந்தரமாக பணியமர்த்த முடிவு செய்துள்ளன.

பெரும்பாலான வழக்குகள் முதலீடு, கடன் மற்றும் வேலை மோசடிகளுடன் தொடர்புடையவை என்பதும், விசாரணைகள் முடிந்த பிறகு பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிகளுடன் தொடர்புடைய 5,300 வங்கிக் கணக்குகளை முடக்கி, கடந்த ஆண்டு $35 மில்லியன் மோசடிப் பணத்தை மீட்டெடுக்க காவல்துறையுடன் இணைந்து பணியாற்றியதற்காக DBS வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற அதிகாரிகளில் சிலர் 2021 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 40 க்கும் மேற்பட்ட வழக்குகளில் $14 மில்லியனை இழக்காமல் தடுத்துள்ளனர்.