வங்கி ATM அட்டை இனி வேண்டாம் – முகத்தை ஸ்கேன் செய்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம்!

(Photo: travel.joogo.sg)

OCBC வங்கி ATM அட்டையை எடுத்துக் கொண்டு வர மறந்துவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்.

இனி அதன் வாடிக்கையாளர்கள் வங்கி ATMகளில் முகத்தை ஸ்கேன் செய்து தங்களுடைய வங்கி கணக்கு தொகையை அறிந்து கொள்ளலாம்.

மேலும், தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண்ணை துன்புறுத்திய பெண்ணுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை

இன்றைய (மார்ச் 18) அறிவிப்பில், OCBC தனது ATMகளில் முகம் சரிபார்ப்பு முறையை செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு ATMகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்

ATM அமைந்துள்ள இடங்கள்:

  • OCBC தெம்பனீஸ் சென்டர் 2
  • Taman ஜூரோங் ஷாப்பிங் சென்டர்
  • கிரேட் ஈஸ்டர்ன், பிக்கரிங் ஸ்ட்ரீட்
  • OCBC தெம்பனீஸ் சென்டர் 1
  • HDB Hub Level 1
  • 103 யிஷுன் ரிங் ரோடு
  • OCBC வளாகம்
  • கெய்லாங் சாலை 7-லெவன்

ஜூன் முதல், சிங்கப்பூரில் உள்ள அதன் அனைத்து 550 ATMகளிலும் முகம் சரிபார்ப்பு முறையில் படிப்படியாக பணம் எடுக்க முடியும் என்று OCBC தெரிவித்துள்ளது.

பணம் போடுவது, பிற வங்கிகளுக்கு பணம் பரிமாற்றம் செய்வது, ரொக்க அட்டை டாப்-அப்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் உள்ளிட்ட மற்ற ATM பரிவர்த்தனைகளையும் அடுத்த ஆண்டு முதல் நடைமுறையில் கொண்டுவர அது திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஊழியர்களின் நலனுக்காக சேவை ஆற்றிய S.நாச்சியப்பன் காலமானார்