OCBC வங்கியில் 5 ஆண்டுகளில் சேமித்த S$120,000 பணத்தை வெறும் 30 நிமிடங்களில் இழந்த சோகம் – தொடர்ந்து எச்சரிக்கும் வங்கி

OCBC customers lost scams
OCBC/Facebook

கணவன், மனைவி இருவரும் சுமார் ஐந்தாண்டுகளில் சேமித்த S$120,000 வெள்ளியை, வெறும் 30 நிமிடங்களில் போலியான குறுஞ்செய்தியைப் பயன்படுத்தி மோசடி கும்பல் திருடியுள்ளனர்.

அவர்கள் இருவரும் OCBC வங்கியில் கூட்டுச் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்த பணத்தைத் அந்த மோசடி கும்பல் திருடியுள்ளதாக கூறப்படுகிறது.

வாடகை கார், மற்றொரு காரில் மோதி விபத்து (வீடியோ): கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் மரணம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில், OCBC வங்கி சம்பந்தப்பட்ட மோசடிகளுக்கு பலியானதாகக் கூறப்படும் குறைந்தது 469 பேரில் அந்த தம்பதியினரும் அடங்குவர்.

இந்த மோசடி கும்பலிடம் சிக்கியவர்கள் மொத்தம் S$8.5 மில்லியன் பணத்தை இழந்தனர்.

அந்த தம்பதியினர் தங்கள் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக தொடங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த அந்த தொகையை திரும்ப பெற முடியவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்யிடம் கவலையுடன் கூறினர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி நண்பகல் வேளையில் மோசடி லிங்க் அடங்கிய குறுஞ்செய்தி தனக்கு வந்ததாக அந்த ஆடவர் கூறினார்.

மூன்றாம் நபர் தங்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டதாகவும், மேலும் இதனை நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்றால் லிங்கை கிளிக் செய்யும்படி அவருக்கு அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டது.

OCBC வங்கியில் இருந்து வந்ததைப் போல SMS இருந்ததாகவும், உண்மையான வங்கிச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான SMS chat history -யை கொண்டிருந்தாகவும் அவர் கூறினார்.

SMS லிங்க் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று OCBC தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு அரசாங்க நிதி: சிங்கப்பூரில் 296 நோயாளிகள் தகுதி – நிதி உதவி எவ்ளோ தெரியுமா?