OCBC வங்கி தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டதாக 13 பேர் கைது – தொடரும் விசாரணை

supervisory actions OCBC MAS

சமீபத்தில் அரேங்கேறிய OCBC வங்கி தொடர்பான குறுஞ்செய்தி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 19 முதல் 22 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என போலீசார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை… முறிந்து விழுந்த மரம்: சிதைந்து போன கார்

அவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அந்த 13 பேரில், ஏழு பேர் மற்றவர்களுக்கு உதவி மட்டும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும் மீதமுள்ள மற்ற 6 சந்தேக நபர்களிடமும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதில் சுமார் S$35,600 மதிப்புள்ள, மொபைல் சாதனங்கள், வங்கி அட்டைகள், சிம் கார்டுகள், இரண்டு ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் மற்றும் S$2,760 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!