‘OCBC’ வங்கியின் அனைத்துச் சேவைகளும் வழக்கமான நிலைக்கு திரும்பியது!

Photo: Wikipedia

 

 

சிங்கப்பூரில் மிகப்பெரிய வங்கியாக உள்ள ‘OCBC’ வங்கி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த வங்கியில் நாள்தோறும் நடைபெறும் பணப்பரிவர்த்தனையும் அதிகம். இந்த நிலையில், ‘OCBC’ வங்கியின் இணைய வழி பணப்பரிமாற்றம், வங்கியின் செயலிகள், வங்கி ஏடிஎம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 28) காலை 08.30 மணிக்கு முடங்கியது.

மீண்டும் ஹாட் டவல் சேவை.. அனைத்து பயணிகளுக்கும் தொடங்கப்படும் – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். இது குறித்து விளக்கம் அளித்த ‘OCBC’ வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்கள் அவசர பணப்பரிவத்தனைக்கு, தங்கள் அருகில் உள்ள ‘OCBC’ வங்கியின் கிளையை நாடலாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்; வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், ‘OCBC’ வங்கியின் மின்னணு முறையிலான அனைத்து சேவைகளும் வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், இன்று நண்பகல் 12.30 மணியளவில் அனைத்து வகையான செயல்படும் சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

‘ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை’- பக்தர்களுக்கு அழைப்பு!

மீண்டும் இதுபோன்ற இடையூறு ஏற்படாத வண்ணம், ‘OCBC’ வங்கியின் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட பிரச்சனையை ஆராய்ந்து நிரந்தரகத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.