தொடர்ந்து குறிவைக்கப்படும் OCBC வங்கி வாடிக்கையாளர்கள்: S$8.5 மில்லியன் பணத்தை ஏமாந்த 469 பேர்

OCBC customers lost scams
OCBC/Facebook

கடந்த டிசம்பர் 29 வரை, OCBC வங்கி வாடிக்கையாளர்கள் 469 பேர், மொத்தம் S$8.5 மில்லியன் பணம் மோசடிகளால் இழந்துள்ளதாக வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த டிசம்பர் 24 முதல் 26 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 186 வாடிக்கையாளர்கள் சுமார் S$2.7 மில்லியன் வரை இழந்துள்ளனர்.

சிங்கப்பூர் வரும் பயணியா நீங்க?? – அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்!

மேலும், கடந்த டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 17க்கு இடையில் 26 வாடிக்கையாளர்கள் சுமார் S$140,000 பணத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிகள் அதிகரிப்பு தொடர்பான தனது முதல் ஊடக ஆலோசனையை கடந்த டிசம்பர் 23 அன்று OCBC வெளியிட்டு வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்தது.

புத்தாண்டு வார இறுதியில் மோசடிகள் அதிகரிக்கும் என்ற நோக்கில் எச்சரிக்கை செய்ய, நேற்று டிசம்பர் 30 அன்று இரண்டாவது ஆலோசனையையும் அது வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட பின்னர், அதை மீண்டும் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என்றும், இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவும் அது கூறியுள்ளது.

“ரெட் லைட்” சிக்னலை மதிக்காமல் சென்ற ஓட்டுநர் – கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த எதிர்மறை விளைவு (காணொளி)