இலவசம்.. இலவசம்.. திரு தர்மனின் வெற்றியை கொண்டாடும் கடை!

offers free pineapple soju wearing pineapple Prinsep Street Tharman Shanmugaratnam
Soi 44 - Prinsep Street / Facebook

அதிபர் தேர்தலில் திரு. தர்மன் சண்முகரத்னம் அபார வெற்றி பெற்றதை அடுத்து அவர் சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

அதில் முக்கியமாக, திரு தர்மன் சண்முகரத்தினத்தின் தேர்தல் பிரச்சார சின்னமாக அன்னாசி பழத்தை தேர்ந்தெடுத்து இருந்தார்.

அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பிரின்செப் ஸ்ட்ரீட்டில் உள்ள “Soi 44” என்ற கடை இலவச சலுகையை அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்

அது என்னவென்றால், அன்னாசிப்பழத்தை மையமாக கொண்டு எதை அணிந்து வந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அன்னாசிப்பழ சோஜூ வழங்கப்படும் என அது கூறியுள்ளது.

இந்த வார இறுதி (செப்டம்பர் 2 முதல் 3 வரை) வரை நீங்கள் $48 மதிப்புள்ள 1½-லிட்டர் அன்னாசிப்பழ சோஜூவை இலவசமாக வாங்கி மகிழலாம்.

ஆர்டர் செய்வதற்கு முன் அந்த கடையின் Facebook பதிவை ஊழியர்களிடம் காட்டினால் மட்டும் போதும். மீண்டும் மீண்டும் வாங்க அனுமதிக்கப்படாது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

S Pass தகுதி சம்பளம் செப்.1 முதல் அதிகரிப்பு: “சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது Work permit ஊழியர்களை சார்ந்திருக்க வேண்டும்”