அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார்.

பிப்.18- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் மஹா சிவராத்திரி விழா!

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங்கின் (PRC Minister of Foreign Affairs Qin Gang) அழைப்பையேற்று, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (பிப்.19) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றுள்ளார்.

வரும் பிப்ரவரி 21- ஆம் தேதி வரை பெய்ஜிங்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பெய்ஜிங் மாநகரக் குழுவின் செயலாளருமான யின் லீ ( Political Bureau of the Communist Party of China and Secretary of the CPC Beijing Municipal Committee Yin Li) மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சின் காங்கின், சர்வதேசத்துறை அமைச்சர் லியூ சியன்சாவ் (Minister of the International Department of the CPC Liu Jianchao) ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறார். அத்துடன், தலைநகர் பெய்ஜிங்கில் சிங்கப்பூர் மாணவர்களையும், வர்த்தகர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மார்ச் முதல் ஜூலை வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள், தேசிய வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் சிம் ஆன் (Ministry of National Development Sim Ann) ஆகியோர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீனாவுக்கு சென்றுள்ளனர்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.