அரசுமுறை பயணமாக கம்போடியா சென்றுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று (15/02/2022) கம்போடியா சென்றுள்ளார். அமைச்சருடன் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் கம்போடியா (Cambodia) சென்றுள்ளனர். கம்போடியா நாட்டின் தலைநகரான நோம் பென் (Phnom Penh) நகருக்கு சென்றுள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் கம்போடியாவின் பிரதமர் ஹுன் சென் (Prime Minister Hun Sen), துணைப் பிரதமர், வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் பிராக் சோகோன் (Deputy Prime Minister and Minister of Foreign Affairs and International Cooperation Prak Sokhonn) மற்றும் பிற முக்கிய கம்போடிய பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 550 பேர் தாக்கப்பட்டுள்ளனர்…

அதைத் தொடர்ந்து, ஆசியான் கூட்டமைப்பின் தலைவராக உள்ள கம்போடியா நடத்தும் ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் (ASEAN Foreign Ministers’ Retreat) பங்கேற்கும் கூட்டத்திலும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்.

இக்கூட்டத்தில் ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது, வெளியுறவுத்துறைக் கொள்கைகள், டிஜிட்டல் பொருளாதாரம், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்சனைகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் கூறுகின்றன.

சிறப்புத் தேவையுடைய பயணிகள் பேருந்து ஓட்டுநர்களிடம் உதவியை நாடலாம்..!

மூன்று நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு வரும் பிப்ரவரி 17- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூர் திரும்புகிறார்.