சிறப்புத் தேவையுடைய பயணிகள் பேருந்து ஓட்டுநர்களிடம் உதவியை நாடலாம்..!

Pic: Getty Images

சிங்கப்பூரில் பேருந்துகளில் பயணம் செய்யும் சிறப்புத் தேவையுடைய பயணிகள் மற்றும் பொதுப் பேருந்துகளில் உதவி தேவைப்படும் பராமரிப்பாளர்கள் பேருந்து ஓட்டுநரிடம் உதவி கேட்கலாம் என போக்குவரத்து மூத்த நாடாளுமன்றச் செயலாளர் Baey Yam Keng தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பொதுப் போக்குவரத்து துறையில் உள்ள சுமார் 6,300 பேருந்து ஓட்டுநர்களுக்கு அது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், சிறப்புத் தேவையுடைய பயணிகளுக்கு உதவி தேவைப்பட்டால் மற்ற பயணிகள் பேருந்து ஓட்டுநர்களிடம் தெரியப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 550 பேர் தாக்கப்பட்டுள்ளனர்…

போக்குவரத்துக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக உள்ள திரு. சக்தியாண்டி நாடாளுமற்றதில், சிறப்புத் தேவையுடைய பிள்ளையுடன் பேருந்தில் ஏற முயன்ற தாயார் ஒருவருக்கு பேருந்து ஓட்டுநர் ஒருவர் உதவி செய்ய முன்வராதது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து மூத்த நாடாளுமன்றச் செயலாளர் Baey Yam Keng, சிறப்புத் தேவையுடைய பிள்ளைக்கோ அதன் பராமரிப்பாளருக்கோ உதவி தேவைப்படுகிறதா என்று பேருந்து ஓட்டுநருக்கு புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் என்றும் ஆகையால், சம்பந்தப்பட்டவர்கள் பேருந்து ஓட்டுநரிடம் தயங்காமல் உதவியை நாடலாம் என்றும், எல்லாவித பயணிகளும் சுமூகமான பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பேருந்து ஓட்டுநர்களுக்கு நாங்கள் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறாம் என்றும் குறிப்பிட்டார்.

“எனக்கு சில வேலைகள் சாதகமாக நடக்க வேண்டும்” – அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த ஊழியர் கணேசன் சுப்பையாவுக்கு சிறை!