“முதியவர் மற்றும் இளைஞரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 40 வயது இளைஞரை ஜனவரி 28- ஆம் தேதி அன்று முதல் காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 471சி ஃபர்ன்வாலே தெருவில் (Blk 471C Fernvale St) காணப்பட்டுள்ளார். இவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ, அந்த இளைஞரை யாரேனும் கண்டாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு அழைப்பு!

அதேபோல், சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றொரு ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 83 வயது மலாய் முதியவரை ஜனவரி 28- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.08 PM மணியளவில் காணவில்லை. அவர் கடைசியாக, பிளாக் 321 தெம்பனீஸ் தெரு 21-ல் (Blk 231 Tampines St 21) காணப்பட்டுள்ளார். அப்போது, கிரே நிற மேல் சட்டையும் (Long-sleeved grey top), நீல நிற ஷார்ட்ஸையும் (Blue shorts) அணிந்திருந்துள்ளார். இவரைப் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ, முதியவரை யாரேனும் பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் அளிக்கலாம்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.