ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு காலை உணவு விருந்தளித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Singapore Foreign Minister Official Facebook Page

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, நவம்பர் 4- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வந்துள்ள ஓமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சயீத் பத்ர் பின் ஹமித் பின் ஹமூத் அல் புசைதி (Sayyid Badr Bin Hamid Bin Hamood Al Busaidi, Foreign Minister of the Sultanate of Oman) மற்றும் ஓமன் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் இட்ரிஸ் பின் அப்துல்ரஹ்மான் பின் ஹமூத் அல் கிண்டி (Secretary-General of the National Security Council of the Sultanate of Oman) ஆகியோர் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை இன்று (05/12/2022) காலை நேரில் சந்தித்துப் பேசினர்.

1 வயது சிறுவனைக் கடித்து தின்ற முதலை: காப்பாற்ற முயன்ற தந்தைக்கு பலத்த காயம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

அத்துடன், ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர், ஓமன் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் காலை உணவு விருந்தளித்தார்.

முருகன் திருக்குன்றம் கோயிலில் இன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்!

பின்னர், ஓமன்- சிங்கப்பூர் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, தொழில் வளர்ச்சிகள், பொருளாதாரம் உள்ளிட்டவைக் குறித்து மூன்று பேரும் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, நாளை (06/12/2022) நடைபெற உள்ள சிங்கப்பூர்- ஓமன் வியூக உரையாடல் கூட்டத்தில் (Singapore-Oman Strategic Dialogue- ‘SOSD’) சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம், சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சரும், வெளியுறவுத்துறையின் இரண்டாவது அமைச்சரும், கல்வித்துறையின் இரண்டாவது அமைச்சருமான டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் (Minister in the Prime Minister’s Office, Second Minister for Foreign Affairs and Second Minister for Education Dr Mohamad Maliki Osman) ஆகியோருடன் இணைந்து ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர், ஓமன் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் பொதுச்செயலாளர் தலைமை தாங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.