முருகன் திருக்குன்றம் கோயிலில் இன்று நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்!

Video crop Image

சிங்கப்பூரில் உள்ள அப்பர் புக்கிட் திமாஹில் (Upper Bukit Timah) அமைந்துள்ளது முருகன் திருக்குன்றம் கோயில். இந்த கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு (Hindu Endowment Board) கீழ் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த முருகன் கோயிலுக்கு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கோயில் நிர்வாகம், கடந்த 2019- ஆம் ஆண்டு கோயிலில் வண்ணப் பூச்சு உள்ளிட்டப் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கியது.

சிங்கப்பூரில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அலை…? அரசாங்கம் கூறும் தகவல்

எனினும், கொரோனா பரவல் காரணமாக, கோயில் புனரமைப்பு பணிகள் தாமதமானது. இதனால் மஹா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதியும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று (05/12/2022) காலை 07.30 மணிக்கு முருகன் திருக்குன்றம் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கலந்துக் கொண்டார்.

“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்

அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, முருகன் திருக்குன்றம் கோயில் விழாக்கோலம் பூண்டது. கோயில் கும்பாபிஷேக நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்ட நிலையில், கோயிலுக்கு வர இயலாத பக்தர்களின் வசதிக்காக சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது.