VTL விமானம் மூலம் சிங்கப்பூர் வந்த 53 பேருக்கு “Omicron” பாதிப்பு

singapore visa removed

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 65 உறுதிப்படுத்தப்பட்ட Omicron COVID-19 பாதிப்புகளில் 53 பேர் VTL விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.

VTLகள் வழியாக நுழைந்த இந்த 53 நபர்களில் 41 பேரின் தொற்று, சிங்கப்பூருக்கு வந்தவுடன் மேற்கொள்ளும் PCR சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டன.

விடுதி ஊழியர்கள் இருவருக்குள் சண்டை: சக ஊழியரை அடித்து, கடித்து காயப்படுத்திய இந்திய ஊழியருக்கு சிறை!

மீதமுள்ள 12 பாதிக்கப்பட்ட நபர்கள், VTL பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட சோதனை முறையின் மூலம் கண்டறியப்பட்டனர் என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும், VTL வழியாக வந்த ஓமிக்ரான் பாதிப்புகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்ட கால குடியிருப்பாளர்கள் என்று சுகாதார அமைச்சகம் கூறியது.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த 65 பேர் மற்றும் உள்ளூர் அளவில் ஆறு உட்பட, மொத்தம் 71 உறுதிப்படுத்தப்பட்ட Omicron பாதிப்புகள் சிங்கப்பூரில் கண்டறியப்பட்டுள்ளதாக MOH திங்களன்று தெரிவித்தது.

தாயகம் திரும்ப மலேசியர்கள் ஆர்வம்: விற்றுத் தீர்ந்த ஜனவரி மாத இறுதி 10 நாள் பேருந்து டிக்கெட்டுகள்!