“கூடுதலாக முன்னேறுவதற்கு முன் மீண்டும் சில படிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” – பிரதமர் லீ

(PHOTO: MCI)

பரவிவரும் இந்த Omicron COVID-19 மாறுபாட்டை சிங்கப்பூர் மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக முன்னேறுவதற்கு முன் மீண்டும் சில படிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் பிரதமர் இன்று (நவம்பர் 28) கூறினார்.

பயணிகளும் வருகையின்போது ART விரைவு சோதனை கட்டாயம்

மக்கள் செயல் கட்சியின் (PAP) அரசியல் கூட்டத்தில் பேசிய திரு லீ, COVID-19க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளது, என்றார்.

ஆனால், செல்லும் வழியில் ஏற்படும் அதிக தடைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது, ​​இந்த புதிய மாறுபாடு கவலையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட திரு லீ, அதை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம், என்றார்.

மேலும், “இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் முன்னோக்கி செல்வதற்கு முன், சில படிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்,” என்று திரு லீ கூறினார்.

மகனுக்கு விலையுயர்ந்த போன் வாங்கிக்கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் தந்தை: அதனால் ஏற்பட்ட விபரீதம் – மகன் தற்கொலை