சிங்கப்பூர் 1 ராஃபிள்ஸ் பிளேஸுக்கு வெளியே இறந்து கிடந்த ஆடவர்…

சிங்கப்பூர் 1 ராஃபிள்ஸ் பிளேஸுக்கு (1 Raffles Place) வெளியே நேற்று செவ்வாய்க்கிழமை (ஜன. 5) இரவு 18 வயது இளையர் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 9:30 மணியளவில் 1 ராஃபிள்ஸ் பிளேஸில் உதவி வேண்டி அழைப்பு வந்தததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) கூறியுள்ளது.

“சிறுவனை காணும்போது என் மருமகன் நினைவு வந்தது” – சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

மேலும் அதே நேரத்தில் காவல்துறைக்குக்கும் உதவி வேண்டி தகவல் கிடைத்தது.

அசைவில்லாமல் கிடந்த அந்த ஆடவர் இறந்ததாக SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

அந்த பகுதியில் SCDF ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகளை பலர் இருந்தாக CNA கூறியுள்ளது.

இந்த இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

1 ராஃபிள்ஸ் பிளேஸ், இரண்டு அலுவலக கோபுரங்கள் மற்றும் கடைத் தொகுதி ஒன்றையும் உள்ளடக்கிய, அலுவலகம் மற்றும் வணிக கட்டிடம் ஆகும்.

IKEA Alexandra உட்பட தொற்று பாதித்தவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…