“சிறுவனை காணும்போது என் மருமகன் நினைவு வந்தது” – சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்!

Singapore Migrant worker rescued boy
(Photo: Kûâšhâ Ďâš/FB)

சிங்கப்பூரில் HDB குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் விளிம்பில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த சிறுவயது குழந்தையை வெளிநாட்டு ஊழியர் ஒருவர் பத்திரமாக காப்பாற்றினார். அது பற்றி நாம் முன்னர் காணொளியுடன் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில், அந்த வெளிநாட்டு ஊழியர் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். மேலும், அவர் இந்த வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

IKEA Alexandra உட்பட தொற்று பாதித்தவர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்

பேஸ்புக்கில் Kûâšhâ Ďâš என்ற பெயர் கொண்ட அந்த ஊழியர், சிறுவனை ஜன்னல் விளிம்பிலிருந்து, பூம் லிப்ட் பயன்படுத்தி காப்பாற்றியது தாம் தான் என்று தன்னை அடையாளம் காட்டும் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

(Photo: Kûâšhâ Ďâš/FB)

அந்த பதிவில், “வேலை நேரத்தில், சிங்கப்பூரில் ஒரு குழந்தைகளின் உயிரை நான் காப்பாற்றினேன்..இது என் வாழ்க்கையில் ஒரு சிறந்த வேலை..நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.

சம்பவம்

இந்த சம்பவம் கடந்த ஜனவரி 3 அன்று காலை 7:50 மணியளவில் பிளாக் 243 ஹௌகங் ஸ்ட்ரீட் 22இல் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) கூறியுள்ளது.

அங்கு HDB குடியிருப்பின் மூன்றாவது மாடியில் நின்றுகொண்டிருந்த சிறுவனை காப்பற்ற திரு. தாஸ் திப்டோ (Das Dipto) என்ற அந்த வெளிநாட்டு ஊழியரிடம் உதவி கேட்கப்பட்டது. அப்போது, பூம் லிப்ட் சுத்தம் செய்யும் வேலையை ஊழியர் செய்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர், பூம் லிப்டில் வழியாக திரு. திப்டோ அந்த சிறுவனை சாமர்த்தியமாக அடைந்து அவரை கவனமாக காப்பாற்றுவதை நாம் முன்னர் காணொளியில் கண்டோம்.

திரு. தாஸ் திப்டோ

இதுபற்றி திரு. தாஸ் திப்டோ கூறுகையில், அந்த சிறுவனை காணும்போது, பங்களாதேஷில் உள்ள தனது மருமகன் உடனடியாக நினைவுக்கு வந்ததாக கூறினார்.

“என் மனதில் ஓடிய ஒரே விஷயம், அந்த சிறுவனை எவ்வாறு பாதுகாப்பாக காப்பாற்றுவது என்பதுதான் ”என்று ஐந்து சகோதரர்களில் இளையவரான திரு திப்டோ கூறினார்.

(Photo: Gaya Chandramohan)

மேலும், “நான் ஸ்பைடர் மேன் போல உணர்ந்தேன், சிறுவனை காப்பாற்ற துரிதமாக செயல்பட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறுவனின் தாயார்

அன்று காலையில், சிறுவனின் தாயார், சிறுவனுடன் சேர்ந்து திரு திப்டோவுக்கு நன்றி தெரிவித்தார்.

“சார், என் மகனைக் காப்பாற்றியதற்கு நன்றி, சார்’, என்று திரு திப்டோவிடம் சிறுவனின் தாயார் கூறினார்.

SCDF விருது

இன்று பிற்பகல் விருது வழங்கும் விழாவில் திரு திப்டோ, மற்றும் அவருடன் இருந்த மற்றொரு ஊழியருக்கும் SCDF விருது வழங்கி அங்கீகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தங்கும் விடுதி அறையில் தங்களை பூட்டிவைத்ததாக வெளிநாட்டு ஊழியர் வழக்கு தொடுப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…