தங்கும் விடுதி அறையில் தங்களை பூட்டிவைத்ததாக வெளிநாட்டு ஊழியர் வழக்கு தொடுப்பு!

Migrant worker sues employer dorm
(PHOTO: TWC2/FB)

வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது முன்னாள் முதலாளி மற்றும் தங்கும் விடுதி ஆபரேட்டர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

இன்று பொது அறிக்கையில், கடந்த ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 21 வரை, தனது விருப்பத்திற்கு மாறாக அவரும், சக ஊழியர்களும் ஒரே அறையில் வைத்து பூட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை மானபங்கம் செய்ததாக இளைஞர் கைது!

வழக்கு

இந்த சம்பவம் தொடர்பான சேதங்களுக்காக தனது முன்னாள் முதலாளியான V. Spec Engineering & Supplies மற்றும் தங்கும் விடுதி ஆபரேட்டர் Joylicious Management, ஆகியோருக்கு எதிராக சிவில் உரிமைகோரலை தாக்கல் செய்துள்ளதாக ரஹ்மான் முஹம்மத் ஹபீபுர் (Rahman Mohammad Hasibur) கூறியுள்ளார்.

இந்த வழக்கு தொடுப்பு மூலம், மற்ற முதலாளிகள் மற்றும் தங்கும் விடுதி ஆபரேட்டர்கள், இதேபோன்ற செயல்களில் அவர்களின் ஊழியர்களிடம் ஈடுபடாமல் இருக்க உதவும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

பேஸ்புக் பதிவு

வெளிநாட்டு ஊழியர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனமான Transient Workers Count Too (TWC2), இந்த சம்பவத்தை முதலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 21, அன்று பேஸ்புக் பதிவில் வெளியிட்டது.

COVID-19 பாதிக்கப்பட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக, அந்த ஊழியர்கள் அனைவரும் ஒரு அறைக்குள் பூட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், அவர்கள் கழிப்பறை அல்லது குளியலறைக்குச் செல்ல வேண்டுமெனில், கதவைத் திறக்க பாதுகாப்புக் காவலர்களை அழைக்க வேண்டியிருந்தது.

இதற்காக அனுமதி கிடைக்க சுமார் 30 நிமிடங்கள் வரை ஆனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத கும்பலின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் மேலும் 52 பேர் கைது

மேலாளர் கருத்து

தங்கும் விடுதி மேலாளர், கடத்த ஏப்ரல் 21, 2020 அன்று Today-விடம் கூறுகையில், ஊழியர்களை அடைத்து வைப்பது அவசியமாக இருந்தது, அந்த நேரத்தில் அவர்களுக்கான பொருத்தமான இடவசதிகள் தயார் செய்யப்பட்டு வந்தன என்றும் கூறினார்.

இதனால் 20 பேர் கொண்ட ஊழியர் குழுவை அவர்களின் அறையில் வைத்து பூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை, ஏனெனில் சுமார் 800 ஊழியர்கள் வசிக்கும் அந்த தங்கும் விடுதியில் மற்ற ஊழியர்கள்களின் பாதுகாப்பிற்கு அது அவசியம் என்று மேலாளர் கூறினார்.

அதன் பின்னர் ஊழியர்கள் ஏப்ரல் 21 அன்று மதியம் மிகவும் வசதியான அறைக்கு மாற்றப்பட்டனர்.

ஆனாலும் மாற்றப்பட்ட அறையின் வாசலில் ஒரு தாழ்பாள் இருப்பதை TWC2 மற்றொரு பதிவில் குறிப்பிட்டது.

மனிதவள அமைச்சு எச்சரிக்கை

மனிதவள அமைச்சு (MOM) தங்கும் விடுதி ஆபரேட்டருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.

MOM அதிகாரிகள் வந்த நேரத்தில் அவர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர், மேலும் அவர்கள் ஒரே அறையில் பூட்டிவைக்கப்படவும் இல்லை.

ஊழியர்கள் கழிப்பறை இணைக்கப்பட்ட வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக MOM கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கவனத்திற்கு… ஏர் இந்தியா!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…