ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த குழந்தையை மீட்ட வெளிநாட்டு ஊழியர் – காணொளி

Migrant worker rescue child
Migrant worker rescue child (PHOTO: All Singapore Stuff / FB)

HDB குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் விளிம்பில் ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருந்த சிறுவயது குழந்தையை வெளிநாட்டு ஊழியர் ஒருவர் மீட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேஸ்புக்கில் சமீபத்தில் வெளியான காணொளி காட்சிகள் அவற்றை காட்டின.

சிங்கப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு

அந்த காணொளி “All Singapore Stuff” என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது, அதில் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னலுக்கு கீழே சிறுவன் ஜன்னல் விளிம்பில் நிற்பதைக் காட்டியது.

பூம் எனப்படும் லிப்டில் வழியாக வெளிநாட்டு ஊழியர் அந்த சிறுவனை சாமர்த்தியமாக அடைந்து அவரை கவனமாக காப்பாற்றுவதையும் காண முடிகிறது.

வெற்றிகரமாக குழந்தையை மீட்ட பிறகு, அருகில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கைதட்டல்கள் மற்றும் ஆரவாரங்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் காலை 7:50 மணியளவில் பிளாக் 243 ஹௌகங் ஸ்ட்ரீட் 22இல் நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) கூறியுள்ளது.

பாதுகாப்பு படை வருவதற்கு முன்பு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் உட்பட புதிதாக 35 பேருக்கு தொற்று

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…